மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை


மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மயிலாடுதுறை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று முன்தினம் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை வருகிற 29-ந் தேதியில் இருந்து தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி கடற்கரையோர மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்தது. இந்தநிலையில் நேற்று மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை.


Next Story