தலமலை பகுதியில் கொட்டித்தீர்த்த கன மழை: தரைப்பாலத்தை மூழ்த்த காட்டாற்று வெள்ளம்; போக்குவரத்து பாதிப்பு

தலமலை பகுதியில் கொட்டித்தீர்த்த கன மழை:  தரைப்பாலத்தை மூழ்த்த காட்டாற்று வெள்ளம்;  போக்குவரத்து பாதிப்பு
x

தலமலை பகுதியில் கொட்டித்தீர்த்த கன மழையால் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு

தாளவாடி

தலமலை பகுதியில் கொட்டித்தீர்த்த கன மழையால் அங்குள்ள தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொட்டித்தீர்த்த கன மழை

ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலை முதல் அவ்வப்போது பலத்த மழையும், தூறலுமாக விட்டு விட்டு பெய்தது. இதனிடையே மதியம் 2 மணி முதல் 3 மணி வரை தலமலை, கோடிபுரம், சிக்கள்ளி, நெய்தாளபுரம் ஆகிய கிராமங்களில் கன மழை கொட்டித்தீர்த்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் அங்குள்ள ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாளவாடியை அடுத்த நெய்தாளபுரம் அருகே உள்ள தரைப்பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் மலைவாழ் மக்கள் தங்களுடைய கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். சுமார் 2 மணி நேரம் கழித்து வெள்ளம் வடிந்த பிறகு போக்குவரத்து சீரானது.

எனினும் அந்த பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட் டது.

Next Story