ஈரோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை:வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுசாலைகளில் ஆறுபோல் வெள்ளம் ஓடியது


ஈரோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை:வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததுசாலைகளில் ஆறுபோல் வெள்ளம் ஓடியது
x

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் ஓடியது.

ஈரோடு

ஈரோட்டில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. சாலைகளில் ஆறுபோல் வெள்ளம் ஓடியது.

சூறைக்காற்றுடன் மழை

ஈரோடு மாநகர் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு தினமும் மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மாலை நேரத்தில் மழை வருவதற்கான அறிகுறிகள் இருந்தாலும் மழை பெய்யவில்லை. இரவில் மின்னல் கீற்றுகள் மட்டுமே தென்பட்டன. இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு திடீரென்று மழை பெய்தது. சிறிது நேரம் பெய்த இந்த மழையால் வெப்பம் குறைந்தது. நேற்றுக்காலையில் இருந்து பிற்பகல் வரை வெயில் வாட்டியது. பிற்பகலில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக சோலார், நாடார் மேடு, முத்தம்பாளையம் பகுதி-7, காளைமாடு சிலை பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.

வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

சாலைகளில் ஆறுபோல் மழை வெள்ளம் ஓடியது. நாடார் மேட்டில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மழை பெய்தபோது சூறைக்காற்றும் வீசியதால் முத்தம்பாளையத்தில் ஒரு பெரிய மரம் முறிந்து விழுந்தது.

மழைநீர் வடிகால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஓடைகளில் வெள்ளம் நிரம்பியதால், சாக்கடை கழிவுகள் சாலைகளில் மிதந்து சென்றன.

மாலை நேரத்தில் பலத்த மழை பெய்ததால் அலுவலகங்களில் பணி முடித்து சென்ற பலரும் நனைந்து கொண்டே சென்றனர். குடை பிடித்தாலும் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மழையில் நனைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


Next Story