பூதலூரில் அதிகபட்சமாக 171 மி.மீட்டர் மழை

தஞ்சை மாவட்டத்தில் பூதலூரில் அதிகபட்சமாக 171 மி.மீட்டர் மழை பெய்தது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. தஞ்சை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் காலை முதல் மாலை வரை வெயில் கொளுத்தியது. ஆனால் அதன்பிறகு திடீரென கருமேகங்கள் திரண்டு வந்தன. பின்னர் சிறிது நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது.பல இடங்களில் கனமழை பெய்தது. இந்த மழையினால் தற்போது குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் சில இடங்களில் வடிகால்கள் சரிவர தூர்வாரப்படாததால் வயல்களில் தண்ணீர் தேங்கி, இளம்பயிர்கள் மூழ்கின. தஞ்சை மாவட்டத்தில் நேற்றுகாலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-பூதலூர்-171, ஈச்சன்விடுதி-160, பட்டுக்கோட்டை-77, வல்லம்-74, அதிராம்பட்டினம்-70, அணைக்கரை-50, நெய்வாசல்தென்பாதி-46, திருக்காட்டுப்பள்ளி-44, குருங்குளம்-31, மதுக்கூர்-29, தஞ்சை-18, வெட்டிக்காடு-14, அய்யம்பேட்டை-14, ஒரத்தநாடு-13, பாபநாசம்-13, கல்லணை-12, மஞ்சளாறு-11, திருவையாறு-5, கும்பகோணம்-5, பேராவூரணி-2.