வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி


வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி
x

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி

திருப்பூர்

அவினாசி

அவினாசி வ.உ.சி. காலனியை சேர்ந்தவர் உமேஷ். இவர் வீட்டை பூட்டிவிட்டு திருமண நிகழ்ச்சிக்காக மனைவியுடன் ராஜபாளையம் சென்றுவிட்டார். இந்த நிலையில் நேற்று பக்கத்து வீட்டுகாரர் இவருக்கு போன் மூலம் சமையல் அறை கதவு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார். எனவே வீட்டிற்குள் சென்று பார்க்குமாறு அவரிடம் உமேஷ் கூறினார். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் வீட்டின் பின்புறமுள்ள சமையல் அறை கதவை உடைத்த வீட்டிற்குள் சென்று அங்கிருந்த பீரோ, ரேக் ஆகியவற்றை திறந்து பணம், நகைகளை திருட முயன்றுள்ளனர். ஆனால் அதில் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்டன் திரும்பி சென்றுள்ளனர். ஆனால் சாமி படத்திற்கு பின்னால் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் தங்க நகை மற்றும் ரூ.40 ஆயிரம் மர்ம ஆசாமிகளுக்கு தெரியாததால் நகை மற்றும் பணம் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Related Tags :
Next Story