எருமப்பட்டி பகுதியில் 14 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி


எருமப்பட்டி பகுதியில் 14 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
x
தினத்தந்தி 30 Aug 2022 10:59 PM IST (Updated: 31 Aug 2022 3:18 PM IST)
t-max-icont-min-icon

எருமப்பட்டி பகுதியில் 14 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்

எருமப்பட்டி:

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி எருமப்பட்டி பகுதியில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி எருமப்பட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொட்டிரெட்டிப்பட்டி, வரகூர், பணக்காரன்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட பா.ஜனதா, இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் போலீசில் அனுமதி கேட்கப்பட்டது.

இதையடுத்து இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி (சனிக்கிழமை) வரை 14 இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.


Next Story