இலுப்பையூரணிமகாதேவா கோவிலில்ஆத்ம சங்கமம் விழா

இலுப்பையூரணிமகாதேவா கோவிலில் ஆத்ம சங்கமம் விழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அடுத்துள்ள இலுப்பையூரணி சாய் அமர்நகர் மகாதேவா கோவிலில் மார்கழி ஆத்ம சங்கமம் விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா மாநிலம் கனேரி சேத்ரா சித்தகிரி சன்னிதானம் அத்ரிஷ்ய காட்சி தேஸ்வரர் சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். நிகழ்ச்சியை யொட்டி ேகாவிலில் காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 9 மணிக்கு மருத்துவ முகாம் நடந்தது. மதியம் 2 மணிக்கு தோட்டிலோவன்பட்டி பஞ்சாயத்து தொடக்கப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 4 மணிக்கு கோ பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு சன்னிதானம் பக்தி சொற்பொழிவு நடத்தினார். விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் முன்பிருந்து இலவச பஸ், வேன் வசதி செய்யப் பட்டிருந்தது.
Related Tags :
Next Story