கோவில்பட்டியில்புத்தக கண்காட்சி் திறப்பு விழா
கோவில்பட்டியில் புத்தக கண்காட்சி் திறப்பு விழா நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் புத்தக கண்காட்சி நேற்று(திங்கட்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 9 வரை நடைபெறுகிறது. கண்காட்சியில்இலக்கியம், வரலாறு, நாவல், சட்டம், மருத்துவம், அறிவியல், அரசியல், போட்டித் தேர்வு நூல்கள், உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட தலைப்புகளில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.
அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி உண்டு. நேற்று நடைபெற்ற புத்தக கண்காட்சி தொடக்க விழாவிற்கு கோவில்பட்டி ரோட்டரி சங்க தலைவர் ரவி மாணிக்கம் தலைமை தாங்கினார்.
திருவள்ளுவர் மன்ற துணை தலைவர் திருமலை முத்துசாமி, தாய் கோ வங்கி மேலாளர் ராமசுப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கசெயலாளர் கார்த்திக் வரவேற்று பேசினார். கோவில்பட்டி புனித ஓம் கல்வி நிறுவனங்களின் தாளாளர் லட்சுமண பெருமாள் புத்தக கண்காட்சியை திறந்து வைத்தார். பாபு முதல் விற்பனையை தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மணிகண்ட மூர்த்தி, பூல்பாண்டி, முத்து முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.