கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்


கோவில்பட்டியில்   இலவச கண் சிகிச்சை முகாம்
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ஆயிர வைசிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் புத்துயிர் ரத்ததான கழகம் மற்றும் கிருஷ்ணன் கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு அனைத்து மருத்துவர் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கருப்பசாமி தலைமை தாங்கினார். பகத்சிங் ரத்ததான கழக தலைவர் காளிதாஸ் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் டாக்டர் கிருஷ்ணவேணி தலைமையில் மருத்துவ குழுவினர் 70 பேருக்கு கண் பரிசோதனை நடத்தினார்கள். 18 பேர் ஆபரேஷனுக்கு தேர்வு செய்யப்பட்டார்கள்.

நிகழ்ச்சியில் நடராஜபுரம் பொதுமக்கள் நல வாழ்வு இயக்கத் தலைவர் செண்பகம், ஆவல்நத்தம் விவசாய சங்க தலைவர் லட்சுமணன், ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், ஊழியர்கள் நிவேதிதா, சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை ரத்ததான கழகத் தலைவர் தமிழரசன் செய்திருந்தார்.


Next Story