மறவன்மடத்தில்இலவச கால்நடை மருத்துவ முகாம்


மறவன்மடத்தில்இலவச கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மறவன்மடத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள மறவன்மடத்தில் உன்னத் பாரத் அபியான் சமூக மேம்பாட்டு திட்டம் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி இணைந்து இலவச கால்நடை மருத்துவ முகாமை நடத்தினர். முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், தூத்துக்குடி உதவி இயக்குனர் அ.ஜோசப்ராஜ், உதவி மருத்துவர் அ.ஆனந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதில் கன்றுக்குட்டி, ஆடு, மாடு, கோழி, பூனை மற்றும் நாய் போன்ற கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் மற்றும் பொதுவான மருத்துவ ஆலோசனைகளும் கொடுக்கப்பட்டன. முகாமில் மறவன்மடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சைகளை பெற்றனர்.

முகாமில் புதுக்கோட்டை கால்நடை ஆய்வாளர் அ.மீரான், கோரம்பள்ளம் கால்நடை ஆய்வாளர் ரா.செல்வராணி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வேலம்மாள், கல்லூரி உன்னத் பாரத் அபியான் மற்றும் சமூக மேம்பாட்டு திட்ட பொறுப்பாளர் டெ. ரதி, பேரசிரியை தா.அமுதா மற்றும் மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story