நாலாட்டின்புத்தூரில்கராத்தே போட்டி

நாலாட்டின்புத்தூரில் கராத்தே போட்டி நடந்தது.
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
நாலாட்டின்புத்தூரிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இடையேயான கராத்தே போட்டி நடைபெற்றது. இதில் 250 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கு சுரேஷ்செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேஷ் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி போட்டியினை தொடங்கி வைத்தார். நடுவர்களாக ஹரிகிருஷ்ணன், செந்தில், ஜெகதீஷ், ராஜேஷ், நாராயணன் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் செயல்பட்டனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கராத்தே ஆசிரியர்கள் குமார், ஆனந்த், மணிகண்டன், ஹரிஷ், ராஜேந்திரன் ஆகியோர் போட்டியை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கராத்தே மாஸ்டர் வெங்கடேஷ்வரன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story