ஒட்டங்காடு ஊராட்சியில், மாவட்ட கவுன்சிலர் ஆய்வு


ஒட்டங்காடு ஊராட்சியில், மாவட்ட கவுன்சிலர்  ஆய்வு
x

ஒட்டங்காடு ஊராட்சியில், மாவட்ட கவுன்சிலர் ஆய்வு

தஞ்சாவூர்

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி தலைமையில், ஊராட்சியில் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்றுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஊராட்சியில் உள்ள மதன்பட்டவூர், நவகொல்லைகாடு நடுமனைக்காடு, பெரியதெற்குகாடு, கோரவயல்காடு ஆகிய பகுதிகளில் மக்களின் அடிப்படை வசதி மற்றும் பள்ளிக்குத் தேவையான வசதிகளை செய்து தருவதையொட்டியும், அந்த பகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் சாலை வசதிகள், தண்ணீர் வசதி, பள்ளி சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாகவும், பள்ளி குழந்தைகளுக்கு இருக்கை வசதி, ஊராட்சிக்கு புதிய வணிக வளாக கட்டிடம் கட்டுவது உள்ளிட்ட பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் போது ஒன்றிய கவுன்சிலர் பாக்கியம் முத்துவேல், ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவர் ராஜாக்கண்ணு மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story