தசராகுழு கணக்கு கேட்ட விவகாரத்தில் தொழிலாளி வீடு சூறை
உடன்குடியில் தசராகுழு கணக்கு கேட்ட விவகாரத்தில் தொழிலாளி வீடு சூறையாடப்பட்டது. இது தொடர்பாக எட்டு பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடியில் தசராகுழு நடத்தியதில் கணக்கு கேட்ட விவகாரத்தில் தொழிலாளி வீடு சூறையாடப்பட்டது. இது தொடர்பாக 8 பேர் கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.
முன்விரோதம்
உடன்குடி வில்லிகுடியிருப்பைச் சேர்ந்தவர் சின்னகண்ணன் (வயது 55). இவரது மகன் மணிகண்டன். தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தசராகுழு நடத்தியுள்ளர். இதில் மணிகண்டன் தரப்பினரும் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் வரவு-செலவு கணக்குகளை சின்னகண்ணன் தரப்பினர் கேட்டுள்ளனர். இது தொடர்பாக இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வ2ந்துள்ளது.
வீடு சூறை
இந்நிலையில், சம்வத்தன்று மணிகண்டன், அவரது மகள் வனிதா ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த ரங்கநாதன் ஆதரவாளர்களான சந்தனகுமார், பட்டுராஜன், சிவபாலன், ரங்கநாதன், சிவராஜ், சதீஷ்குமார், மாதவன், ராணி ஆகியோர் கும்பலாக வீடுபுகுந்து இரும்பு கம்பி, கட்டையால் மணிகண்டன், வனிதாவை தாக்கியுள்ளனர். வனிதா லேசான காயத்துடன் தப்பினார். பின்னர் அந்த வீட்டில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
8 பேருக்கு வலைவீச்சு
இது தொடர்பாக மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் சந்தனகுமார் உள்ளிட்ட 8 பேர் மீது குலசேகரன்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து தேடிவருகிறார்.
இதற்கிடையில் வில்லிகுடியிருப்பைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சின்னகண்ணன் தன்னை தாக்கியதாக குலசேகரன்பட்டினம் போலீசாரிடம் புகார் ெசய்துள்ளார். இது தெடர்பாகவும் போலீசார் தனி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.