கார்த்திகை மாதத்திலும் கோழி இறைச்சி 1 கிலோ ரூ.200-க்கும் மேல் விற்பனை


கார்த்திகை மாதத்திலும் கோழி இறைச்சி  1 கிலோ ரூ.200-க்கும் மேல் விற்பனை
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை மாதத்திலும் கோழி இறைச்சி 1 கிலோ ரூ.200-க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது

மயிலாடுதுறை

கார்த்திகை மாதத்தில் அய்யப்பன் கோவிலுக்கு பக்தா்கள் மாலை அணிவது வழக்கம். இந்த மாதத்தில் இறைச்சி விற்பனை மந்தமாக நடைபெறும். இதனால் இறைச்சி விலை குறைந்து காணப்படும். ஆனால் மயிலாடுதுறையில் கார்த்திகை மாதத்திலும் கோழி இறைச்சி ரூ.200 -க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் முட்டையின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஒரு முட்டை 5 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது.


Next Story