சத்துணவு கூடகிட்டங்கியில்தீவிபத்து: 24,900 முட்டை சேதம்


சத்துணவு கூடகிட்டங்கியில்தீவிபத்து: 24,900 முட்டை சேதம்
x
தினத்தந்தி 23 Feb 2023 6:45 PM GMT (Updated: 23 Feb 2023 6:46 PM GMT)

கோவில்பட்டி யூனியன் அலுவலகத்திலுள்ள சத்துணவு கூடகிட்டங்கியில் ஏற்பட்ட தீவிபத்தில் 24,900 முட்டை சேதம் அடைந்தன.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி யூனியன் அலுவலக சத்துணவு கூட கிட்டங்கியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு 24,900 முட்டைகள் வீணாகின.

முட்டை கிட்டங்கி

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கிட்டங்கியில் சத்துணவு கூடங்களுக்கான முட்டைகள் வைக்கப்படுவது வழக்கம். இங்கிருந்து யூனியனுக்கு உட்பட்ட 117 சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் அனுப்பி வைக்கப்படும். நேற்று முன்தினம் காலையில் 1,530 அட்டைகளில் தலா 30 முட்டைகள் வீதம் மொத்தம் 45,900 முட்டைகள் லாரியில் கொண்டு வரப்பட்டன. மாலையில் 32 மையங்களுக்கு 21 ஆயிரம் முட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள 24,900 முட்டைகள் கிட்டங்கியில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்று மதியம் இந்த முட்டைகளை மையங்களுக்கு எடுத்துச்செல்ல ஊழியர்கள் சென்றனர்.

திடீர் தீவிபத்து

அப்போது முட்டைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) செ.மனோஜ்குமார் தலைமையிலான வீரர்கள் வந்து பார்த்தபோது, முட்டைகள் வைக்கப்பட்டு இருந்த அட்டைகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனால் கிட்டங்கியில் வைக்கப்பட்டு இருந்த 24,900 முட்டைகளும் ேசதமடைந்தன.

அதிகாரிகள் விசாரணை

விசாரணையில், கிட்டங்கி அருகே கிடந்த குப்பையில் பற்றிய தீயில் இருந்து, தீப்பொறிகள் விழுந்து முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அட்டைகள் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து யூனியன் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story