போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்மின்கசிவால் தீ விபத்து

தேனி போலீஸ் சூப்பிரண்டு அலுவலக்ததில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
தேனி
தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முதல் மாடியில் போலீஸ் சூப்பிரண்டு அறை மற்றும் கூட்டரங்கு உள்ளது. இந்த கூட்டரங்கு நுழைவு வாயில் மேல்பகுதியில் அமைந்துள்ள மின்சார பெட்டியில் நேற்று காலை 10 மணியளவில் திடீரென தீப்பற்றியது. மின்கசிவால் ஏற்பட்ட தீயால் அங்கு புகைமூட்டம் ஏற்பட்டது. அங்கிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு உபகரணம் உதவியுடன் தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து தீயில் கருகிய மின்சார வயர்களை சரிசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story