கோவில்பட்டியில்த.மா.கா.வினர் 6 பேர் கைது

கோவில்பட்டியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக த.மா.கா.வினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி புறவழிச்சாலையில் கூடுதல் பஸ்நிலையம் வழியாக இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை செல்லும் அனைத்து பஸ்களும், அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டும், 24 மணி நேரமும் அண்ணா பஸ் நிலையம் முதல் கூடுதல் பஸ் நிலையம் வரை சர்குலர் பஸ் இயக்கக் கோரி மாடுகளுடன் நாற்கர சாலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மறியல் போராட்டம் நடத்தப் போவதாக த.மா.கா. நகர தலைவர் ராஜகோபால் அறிவித்திருந்தார். இப்போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் உள்பட 6 த.மா.கா.வினரை கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story