திருச்செந்தூர் தொகுதியில்அனைத்து பகுதிகளுக்கும்தாமிரபரணி குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு


திருச்செந்தூர் தொகுதியில்அனைத்து பகுதிகளுக்கும்தாமிரபரணி குடிநீர் கிடைக்க நடவடிக்கை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவு
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும்தாமிரபரணி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர் தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் தாமிரபரணி குடிநீர் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

ஆலோசனை கூட்டம்

திருச்செந்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட உள்ள குடிநீர் திட்டங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மதியம் நடந்தது. கூட்டத்துக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் திருச்செந்தூர் தொகுதிக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றித்தருவதற்கு கோரிக்கை வைத்து உள்ளோம். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக வருகின்றனர். திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. மேலும் வீட்டில் உள்ள கழிவுநீரை பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்க 350 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும். கழிவுநீர் மற்றும் குப்பைகள் ஓடைகளில் சென்று சேர்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குடிநீர்

திருச்செந்தூரை கோவிலை திருப்பதிக்கு இணையாக மாற்ற வேண்டுமென்றால் நகரத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். திருச்செந்தூர் தொகுதியில் உள்ள மீனவ கிராமங்கள், பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புறங்களில் தாமிரபரணி குடிநீர் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். திருச்செந்தூர் நகராட்சிக்கு நேரடியாக தண்ணீர் விநியோகம் செய்வதில் பிரச்சினைகள் உள்ளது. எனவே 3 இடங்களில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைத்து மோட்டார்கள் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story