திருவாரூரில், எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாலை மறியல்

தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்ததை கண்டித்து திருவாரூரில், சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்ததை கண்டித்து திருவாரூரில், சாலை மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாலை மறியல்
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஜ. அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்து பலரை கைது செய்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை கண்டித்து திருவாரூர் ரெயில்வே மேம்பாலத்தில் எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் முகமது ஆரிப்பின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. இதில் எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
16 பேர் கைது
இந்த மறியல் போராட்டத்தினால் தஞ்சை-நாகை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து. தகவல் அறிந்த திருவாரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.