டி.என்.பாளையம் வனப்பகுதியில் சந்தன கட்டைகள் கடத்திய வாலிபர் கைது மற்றொருவருக்கு வலைவீச்சு


டி.என்.பாளையம் வனப்பகுதியில்  சந்தன கட்டைகள் கடத்திய வாலிபர் கைது  மற்றொருவருக்கு வலைவீச்சு
x

சந்தன கட்டை

ஈரோடு

டி.என்.பாளையம் வனப்பகுதியில் மலைவாழ் இளைஞர்கள் சிலரை பயன்படுத்தி கே.என்.பாளையம் நரசாபுரத்தை சேர்ந்த அய்யப்பன் (வயது 36) சந்தன மரக்கட்டைகளை திருட்டுத்தனமாக விற்பதற்காகவும், கடத்துவதாகவும் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் கணேஷ்பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் அய்யப்பனை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தியபோது அவர், மலைவாழ் இளைஞர்களை பயன்படுத்தி சந்தனமரத்தை வெட்டி அதை சிறு துண்டுகளாக்கி அவற்றுக்கு கிலோவுக்கு 1500 ரூபாய் கொடுத்து வாங்கி வருவதும், அதை திருச்சியை சேர்ந்த அம்ஜத் அலி என்பவருக்கு ஒரு கிலோ சந்தன கட்டைகளை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் அய்யப்பனை கைது செய்து அவரிடம் இருந்த 4 கிலோ சந்தன கட்டைகளையும், ஒரு மொபட்டையும் பறிமுதல் செய்தார்கள். மேலும் தலைமறைவாக உள்ள அஜ்மல் அலியை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story