தூத்துக்குடியில் இறைச்சி கடைக்காரர் திடீர் சாவு

தூத்துக்குடியில் இறைச்சி கடைக்காரர் திடீரென இறந்து போனார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி டி.எம்.பி காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 32). இவர் தூத்துக்குடி 3-வது மைலில் பிரியாணி மற்றும் இறைச்சி கடை நடத்தி வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி முருகனின், உறவினர் கணேசை போலீசார் தாக்கி உள்ளனர். இதனை அறிந்த முருகன் தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அங்கு திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீவைத்துக் கொண்டார். உடனடியாக அங்கு இருந்த போலீசார், தீயை அணைத்து முருகனை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று குணம் அடைந்த முருகன் வீடு திரும்பினார். இந்த நிலையில் முருகன் நேற்று முன்தினம் திடீரென பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story