தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து


தூத்துக்குடியில்  கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே திடீர் வாகன சோதனையும் நடைபெற்று வருகிறது.

கஞ்சா விற்பனையை தடுக்க...

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுப்பதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன்படி மாவட்டத்தில், அரசால் தடைசெய்யப்பட்ட புகையில் பொருட்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதற்காக அந்தந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுமாறு அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் அவர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் ரோந்து

இந்த நிலையில் நேற்று ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு சம்பத் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட ராஜகோபால் நகர், பி.என்.டி. காலனி, முருகேசன் நகர், மீளவிட்டான்ல ரயில்வே தண்டபாளம் போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று சோதனை நடத்தினர். மேலும் அப்பகுதி மக்களிடம் கஞ்சா போன்ற போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story