தூத்துக்குடியில்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம்


தூத்துக்குடியில்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம்
x

தூத்துக்குடியில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி பி.எம்.சி. மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கழகம் சார்பில் நுழைவு வாயிற் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் யூஜின் தலைமை தாங்கினார். செயலாளர் மூக்கையா முன்னிலை வகித்தார். இயக்க ஆலோசகர் சற்குணராஜ் பேசினார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், சரண் விடுப்பு மற்றும் பஞ்சப்படி போன்றவற்றை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும், மாணவர்களுடைய விவரங்களை எமிஸில் பதிவேற்றம் செய்ய தனியாக சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் ஜெகதீசன், கல்வி மாவட்ட தலைவர் நம்பிராஜன், மகளிரணிச் செயலாளர் மங்களாவதி, மகளிர் அணி இணைச் செயலாளர்கள் அன்னாள் ஆனந்தக்கனி, ஜெயந்தி, ரோகிணி, மண்டல தலைவர் சரவண முத்துக்குமார் அமைப்புச் செயலாளர் சதீஷ்குமார், தலைமையிடச் செயலாளர் சவரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story