விழுப்புரத்தில்கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் கரும்புகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரும்பு விவசாயிகளிடம் செங்கரும்புகளை கட்டுப்படியான விலையுடன் கொள்முதல் செய்ய வேண்டுமென வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வேல்மாறன் தலைமை தாங்கி கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராமமூர்த்தி, கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் குண்டுரெட்டியார், மாநில செயலாளர் ஜோதிராமன், சிறப்பு தலைவர் கதிரேசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தாண்டவராயன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராமன் உள்பட பிடாகம், பி.குச்சிப்பாளையம், நத்தமேடு, அத்தியூர், மரகதபுரம், ஏமப்பூர், திருப்பச்சாவடிமேடு, நாயனூர், அரசங்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கரும்புடன் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.