மனித உரிமைகள் பயிற்சி தொடக்க விழா

வேலூர் ஆப்காவில் மனித உரிமைகள் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
வேலூர்
வேலூர் தொரப்பாடியில் உள்ள சிறை நிர்வாகம் மற்றும் சீர்திருத்த பயிற்சி மையத்தில் (ஆப்கா) சிறை நிர்வாகத்தில் மனித உரிமைகள் குறித்த 5 நாட்கள் பயிற்சி தொடக்க விழா நேற்று நடந்தது. ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். துணை இயக்குனர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். பேராசிரியர் மதன்ராஜ் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக வேலூர் அரசு சட்டக்கல்லூரி முதல்வர் ஜெயாகவுரி கலந்து கொண்டு மனித உரிமைகள் தொடர்பான கையேட்டை வெளியிட்டு ஜெயில் கைதிகளுக்கு உள்ள உரிமைகள் குறித்து பேசினார். விழாவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, மிசோரம், தெலுங்கானா, இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த உதவி ஜெயிலர்கள், துணை கண்காணிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story