3 பள்ளிகளில் சமையல்கூட கட்டிடம் திறப்பு

தலைஞாயிறுஅருகே 3 பள்ளிகளில் சமையல்கூட கட்டிடம் திறப்பு
வாய்மேடு;
தலைஞாயிறு அருகே உள்ள குண்டுரான்வெளி ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.50 லட்சத்தில் சமையல்கூட கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு வேதாரண்யம் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கட்டிடத்தை திறந்து வைத்தார். அ.தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் அவை.பாலசுப்ரமணியன், மேற்கு ஒன்றிய செயலாளர் தங்க.சவுரிராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க. கழக நிர்வாகிகள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதே போல ஆய்மூரில் உள்ள தொடக்கப்பள்ளியிலும் ரூ.5.50 லட்சத்தில் சமையல்கூட கட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. மேலும் பெருமழை பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியிலும் சமையல் கூட கட்டிடத்தை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ.திறந்து வைத்தார். இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.