முதன்மைக்கல்வி அலுவலர் பதவியேற்பு


முதன்மைக்கல்வி அலுவலர் பதவியேற்பு
x

முதன்மைக்கல்வி அலுவலர் பதவியேற்பு

மதுரை

மதுரை,

மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றி வந்த சுவாமிநாதன் சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து, மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக கே.கார்த்திகா நேற்று பதவியேற்று கொண்டார். அவர் கடந்த 2017-ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் மாவட்ட கல்வி அலுவலராக பணியில் சேர்ந்தார். அதற்கு முன்னதாக சுமார் 8 வருடங்கள் வட்டாரவள மைய ஆசிரியராக பணியாற்றி வந்தார். மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பதவியேற்பதற்கு முன்னர் உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட அலுவலராக பணியாற்றினார். தற்போது பதவி உயர்வில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மதுரை, மேலூர், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் கல்வி மாவட்ட அலுவலர்கள், மேல்நிலை, உயர்நிலை நேர்முக உதவியாளர்கள் கந்தசாமி, செந்தில் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story