கொரடாச்சேரி டிரைவர், சவுதி அரேபியாவில் சாவு

கொரடாச்சேரியை சேர்ந்த டிரைவர், சவுதி அரேபியாவில் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டுத்தர வேண்டும் என மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்
கொரடாச்சேரி
கொரடாச்சேரியை சேர்ந்த டிரைவர், சவுதி அரேபியாவில் உயிரிழந்தார். அவரது உடலை மீட்டுத்தர வேண்டும் என மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.
சவுதி அரேபியாவில் டிரைவர் வேலை
திருவாரூரை அடுத்த கொரடாச்சேரி வடக்குமாங்குடி பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 54). இவர், சவுதி அரேபியா நாட்டில் உள்ள ரியாத் நகரில் டிரைவராக பணியாற்றி வந்தார்.கடந்த 7-ந் தேதி சம்பத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சவுதி அரேபியாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன்பின்னர் சம்பத் குறித்து எந்த தகவலும் அவரது குடும்பத்துக்கு தெரியவில்லை.
உடலை மீட்டுத்தர கோாிக்கை
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி சம்பத் இறந்து விட்டதாக சவுதி அரேபியாவில் இருந்து அவரது குடும்பத்துக்கு தகவல் ெதரிவிக்கப்பட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.சவுதி அரேபியாவில் உள்ள தனது கணவர் உடலை மீட்டுத்தருவதோடு அவரது சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சம்பத்தின் மனைவி மாலா, திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீயிடம் மனு அளித்துள்ளாா்.
சோகம்
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாருஸ்ரீ இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.குடும்பத்தை காப்பாற்றுவதற்காக சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்ற டிரைவர் சம்பத் உயிரிழந்த சம்பவம் வடக்குமாங்குடி கிராம மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.