மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில்ரூ.47¼ லட்சத்தில் கடைகள் கட்டும் பணிகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு


மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில்ரூ.47¼ லட்சத்தில் கடைகள் கட்டும் பணிகலெக்டர் சாந்தி நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 2 Sept 2023 1:00 AM IST (Updated: 2 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மாரண்டஅள்ளி:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் ரூ.47 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் 6 புதிய கடைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கடைகள் கட்டும் பணி தொடங்கியது. இந்த பணியை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து மாரண்டஅள்ளி பேரூராட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட தொகை விண்ணப்பங்கள் குறித்து கேட்டறிந்தார். இந்த விண்ணப்பங்கள் மீதான கள ஆய்வு பணியை விரைவாக முடிக்க பேரூராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வின்போது பேரூராட்சி செயல் அலுவலர் ஆயிஷா, இளநிலை பொறியாளர் முருகன், இளநிலை உதவியாளர்கள் சம்பத், தங்கராஜ், கவுன்சிலர்கள் முனிராஜ், வெங்கடேசன், பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Next Story