சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு


சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு

சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர். சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் சிந்தனைச்செல்வன், சுதர்சனம், பிரகாஷ், மாரிமுத்து ஆகியோர் மாவட்டத்தில் நடைபெற்ற பணிகளை நேரில் ஆய்வு செய்தனர். அவர்களுடன் கலெக்டர் மதுசூதன் ரெட்டி, சட்டமன்ற பேரவை செயலாளா் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி, தமிழரசி ரவிக்குமார், சட்டமன்ற பேரவை இணை செயலாளா் தேன்மொழி, துணை செயலாளர் ரேவதி ஆகியோர் உடன் சென்றனர்.

இந்த குழுவினர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள், காரைக்குடி ஆதிதிராவிடர் நலத்துறையின் அரசினர் மாணவியர் விடுதி, காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி, கீழடி 7-ம் கட்ட அகழாய்வு மையம், அருங்காட்சியக பணிகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

நலத்திட்்ட உதவி

அப்போது குழு தலைவர் செல்வ பெருந்தகை கூறியதாவது:- தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பொது கணக்குக்குழு 100 வருடம் கடந்து, தொடா்ந்து ஜனநாயகத்தை நிலைநாட்டும் விதமாக செயல்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் சட்டமன்ற தொகுதிகள் வாரியாக, துறைகள் ரீதியாக களஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசின் நலத்திட்ட செயல்பாடுகள் தொடர்பாக அரசிற்கு அறிக்கை சமா்ப்பித்து, பணிகள் மேற்கொள்வது இக்குழுவின் பணியாகும். இந்த ஆய்வுகளின் போது ஏதேனும் தவறுகள் நிகழ்ந்திருப்பது அறியப்பட்டால், துறை சார்ந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் இக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது என்றார்.

பின்னர் 64 பயனாளிகளுக்கு ரூ.25 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளா் (பொது) கண்ணகி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

முறைகேடு புகார்

முன்னதாக காரைக்குடியில் தமிழ்நாடு சட்ட மன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:- அழகப்பா பல்கலைக்கழகத்தில் கடந்த 2015-18-ம் ஆண்டு வரை பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக வந்த அறிக்கையின்படி ஆய்வு செய்தோம். அந்த காலக்கட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. அதை முறையாக ஆய்வு செய்துள்ளோம். இதுகுறித்து விவாதிக்க உள்ளோம். அதேபோல் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளை பார்வையிட்டுள்ளோம். அங்கு மாணவர்களுக்கு படுக்கை உபகரண பொருட்கள் இல்லை என புகார் வந்தது. அதை கலெக்டர் சரி செய்வதாக கூறியுள்ளார். காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு என்ன தேவை என்பதையும் ஆய்வு செய்ய உள்ளோம் என்றார்.


Related Tags :
Next Story