கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி தீவிரம்


கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி தீவிரம்
x

குன்னூரில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நீலகிரி

குன்னூர்,

குன்னூரில் டென்ட்ஹில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி, மாவட்ட கல்வி அலுவலகம் உள்ளன. டென்ட் ஹில் குடியிருப்பு பகுதி குன்னூர் நகராட்சியின் 28-வது வார்டிற்கு உட்பட்டது. பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்கு செல்ல குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து செல்லும் நடைபாதையை பயன்படுத்தி வந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக சாலை, கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்கவில்லை. இதனால் மழை காலங்களில் அப்பகுதி மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை இருந்து வந்தது.மேலும் நடைபாதையை ஒட்டி கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால், கடும் தூர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் காணப்பட்டது. இதையடுத்து நடைபாதை மற்றும் கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைதொடர்ந்து நகராட்சி சார்பில் ரூ.12 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் நடைபாதையுடன் கூடிய கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story