கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு தாலுகாக்களில் நாளை ஜமாபந்தி தொடக்கம்

கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு தாலுகாக்களில் நாளை ஜமாபந்தி தொடங்குகிறது.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) வேட்டவலம் வருவாய் உள்வட்டத்துக்கும், 6-ந்தேதி (திங்கட்கிழமை) சோமாசிபாடி வருவாய் உள்வட்டத்துக்கும், 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கீழ்பென்னாத்தூர் வருவாய் உள் வட்டத்துக்கும் நடக்கிறது.
ஜமாபந்தி நடக்கும் 3 நாட்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி தலைமை தாங்கி தினமும் காலை 10 மணிக்கு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொள்கிறார். பொதுமக்கள் தங்களது கோரிக்கை, குறை மனுக்களை அதிகாரியிடம் கொடுத்து பயன் பெறலாம்.
இதேபோல தண்டராம்பட்டு வருவாய் உள் வட்டத்துக்கு நாளையும், தானிப்பாடி உள் வட்டத்துக்கு 6-ந்தேதியும், வாணாபுரம் உள் வட்டத்துக்கு 7-ந்தேதியும் ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது. இதில், பொதுமக்கள் தங்களது கோரிக்கை, குறை மனுக்களை மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவலை தாசில்தார்கள் சக்கரை, பரிமளா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.