ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

குத்தாலம் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது
குத்தாலம்:
குத்தாலம் அருகே மங்கைநல்லூரில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய அலுவலகத்தில் ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் தத்தங்குடி இளங்கோவன் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதாபேரவை இணை செயலாளர் முத்து, ஒன்றிய தலைவர் வேல்முருகன், பேரவை இணை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தெற்கு ஒன்றிய செயலாளர் செழியன் வரவேற்றார். இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் மணக்குடி எம்.ஆர்.எஸ். சங்கர் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார். இதில் பொதுக்குழு உறுப்பினர் செல்வம், ஒன்றிய துணை செயலாளர் ராஜேந்திரன், கோடி மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் விஜிசெல்வகுமார், பேரவை துணை செயலாளர் கேசவன் உள்ளிட்ட அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் சந்திரபோஸ்வர்மா நன்றி கூறினார்.