பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு


பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
x

எடப்பாடி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சேலம்

எடப்பாடி

எடப்பாடி அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் நகை-பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தலைமை ஆசிரியர்

எடப்பாடி நகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (வயது50). இவர் எடப்பாடி அருகே உள்ள சின்னதாண்டனூர் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை ஆகும்.

இவர் குடும்பத்துடன் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடுவதற்காக சொந்த ஊரான தேன்கனிக்கோட்டைக்கு சென்றார். நேற்று முன்தினம் அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் குழந்தைசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தார்.

நகை, பணம் திருட்டு

அப்போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைசாமி எடப்பாடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது வீடு பூட்டி இருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story