நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறிப்பு

சிவகங்கையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2½ பவுன் நகை
சிவகங்கை லஜபதிராய் தெருவை சேர்ந்தவர் பால சண்முகம். இவருடைய மனைவி மோகனா (வயது 75). சம்பவத்தன்று மோகனா சிவகங்கையில் நடைபெற்ற வார சந்தையில் காய்கறி வாங்கிக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவரை பின்தொடர்ந்து சென்றனர்.
அப்போது அவர்கள் மோகனாவிடம் இந்த பகுதியில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக நடைபெறுவதால் நீங்கள் நகைகளை இப்படி போட்டு கொண்டு செல்லலாமா என்று கூறி நகையை கழற்றி தாருங்கள் கவரில் போட்டு தருகிறோம் எனக்கூறியுள்ளனர். பின்னர் மோகனா அணிந்திருந்த 2½ பவுன் நகையை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அவர்கள் அதை ஒரு கவரில் பொட்டலமாக மடித்து கொடுப்பது போல் கொடுத்துள்ளனர்.
போலீசார் வலைவீச்சு
இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் சென்று விட்டனர். பின்னர் மோகனா வீட்டிற்கு சென்று அந்த பொட்டலத்தை பிரித்து பார்த்தபோது அதில் கவரிங் நகைகள் இருந்தன. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அவர் சிவகங்கை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.