வள்ளியம்மன் கோவிலில் நகை திருட்டு

இடும்பாவனம் மேலவாடியக்காட்டில் வள்ளியம்மன் கோவிலில் நகை திருட்டு போனது.
திருவாரூர்
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டையை அடுத்த இடும்பாவனம் மேலவாடியக்காடு கிராமத்தில் வள்ளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாரதா தேவி என்பவர் பூசாரியாக உள்ளார். இவர் நேற்று முன்தினம் பூஜை முடிந்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் நேற்று மாலை வந்து பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்துதகவல் அறிந்து முத்துப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தம், சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், பசீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story