கே.சின்னத்துரை அன்கோ புதிய கட்டிடம் திறப்பு விழா

ஏரலில் கே.சின்னத்துரை அன்கோ புதிய கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
ஏரலில் கடந்த 50 ஆண்டுகளாக மெயின்பஜாரில் செயல்பட்டு வந்த தரத்தின் தாயகம் கே. சின்னத்துரை அன் கோ ஜவுளிக்கடை தற்போது பொதுமக்களின் வசதிக்காக ஏரல் பஸ் நிலையம் அருகே இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. நவீன கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பொலிவுடன் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு வந்தவர்களை கடை உரிமையாளர்கள் திருநாவுக்கரசு, ஹரிராமன் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் வரவேற்றனர். முதல் விற்பனையை தொழில் அதிபர் சோமசுந்தரம் பெற்றுக் கொண்டார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கடை உரிமையாளர்கள் செல்வராஜ் மற்றும் திருமணி ஆகியோர் பொன்னாடை அணிவித்தனர்.
திறப்பு விழாவை முன்னிட்டு வருகிற 9-ந் தேதி வரை ஜவுளி வாங்கும் அனைவருக்கும் 10 சதவீதம் தள்ளுபடி மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. விழாவில் தொழிலதிபர்கள், வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.