கபடி போட்டி


கபடி போட்டி
x

மருதகுளத்தில் கபடி போட்டி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

மருதகுளம் பிரின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 52-வது மாநில அளவிலான கபடி போட்டிகள் மருதகுளம் காமராஜர் திடலில் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை டக்கரம்மாள்புரம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளரும், சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல பெருமன்ற உறுப்பினருமான தேவா காபிரியேல் ஜெபராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பரிசு கோப்பைகளை அறிமுகம் செய்து வைத்தார்.

போட்டி ஏற்பாடுகளை பிரின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் தர்மராஜ், செயலாளர் பிரவீன் பாரத், பொருளாளர் அருளானந்தம், ஒருங்கிணைப்பாளர்கள் பிரேம்குமார் சாலமோன், மங்களராஜ், நிர்வாகிகள் ஜான்ஆசீர், சார்லஸ் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story