முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் அரசு பள்ளி, கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.


முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் அரசு பள்ளி, கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.
x

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் அரசு பள்ளி, கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.

திருப்பூர்

திருப்பூர்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டியில் அரசு பள்ளி, கல்லூரி அணிகள் வெற்றி பெற்றன.

கபடி போட்டி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருப்பூர் பிரிவு, திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் இணைந்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட கபடி போட்டிகள் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த போட்டியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார். கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி, திருப்பூர் கபடி கல்வி அறக்கட்டளை சேர்மன் சக்தி பிலிம்ஸ் சுப்பிரமணியம், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பொருளாளரும், திருப்பூர் மாவட்ட கபடி கழக செயலாளருமான ஜெயசித்ரா சண்முகம், சேர்மன் கொங்கு முருகேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவு, அரசு ஊழியர், மாற்றுத்திறனாளி என 5 பிரிவுகளாக நடத்தப்பட்டது. 2 ஆயிரம் கபடி வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். நடுவர் குழு தலைவர் முத்துசாமி தலைமையில் கன்வீனர் சேகர் உள்பட 14 பேர் நடுவர்களாக பணியாற்றினார்கள். 5 பிரிவுகளில் மாவட்ட அளவிலான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட கபடி கழக பார்வையாளர்களாக ருத்ரன், வாலீசன், ராஜூ, தம்பி வெங்கடாசலம், மகேஷ், ரவிச்சந்திரன், நாகராஜ் ஆகியோர் தேர்வு செய்தனர்.

வெற்றி பெற்ற அணிகள்

பள்ளி மாணவர்கள் பிரிவில் திருப்பூர் சின்னச்சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி 2-வது இடத்தையும், ஊத்துக்குளி அரசு மேல்நிலைப்பள்ளி 3-வது இடத்தையும் வென்றது. பள்ளி மாணவிகள் பிரிவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மற்றொரு அணி 2-வது இடத்தையும், குண்டடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 3-வது இடத்தையும் பிடித்தன. கல்லூரி மாணவர்கள் பிரிவில் உடுமலை அரசு கலைக்கல்லூரி, காங்கயம் இ.பி.இ.டி. கல்லூரி, காங்கயம் அரசு கல்லூரி முறையே முதல் 3 இடங்களை வென்றன.

கல்லூரி மாணவிகள் பிரிவில் திருப்பூர் ஏ.வி.பி. கல்லூரி, உடுமலை வித்யாசாகர் கல்லூரி, திருப்பூர் எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி அணிகள் முதல் 3 இடங்களை பிடித்தன.

பொதுப்பிரிவு பெண்கள் பிரிவில் திருப்பூர் டாலர் சிட்டி முதலிடத்தையும், உடுமலை வி.ஆர்.டி.ஸ்போர்ட்ஸ் கிளப் 2-வது இடத்தையும், உடுமலை பெரியார் ஸ்போர்ட்ஸ் 3-வது இடத்தையும் வென்றன. பொதுப்பிரிவு ஆண்கள் பிரிவில் திருப்பூர் டால்பின் கபடி குழு முதலிடத்தையும், திருப்பூர் காரல் மார்க்ஸ் கபடிக்குழு 2-வது இடத்தையும், செட்டிப்பாளையம் ஸ்போர்ட்ஸ் கிளப் 3-வது இடத்தையும் பிடித்தன.

மாநில போட்டி

அரசு ஊழியர்கள் ஆண்கள் பிரிவில் திருப்பூர் மாவட்ட காவல்துறை முதலிடத்தையும், திருப்பூர் பிரண்ட்ஸ் கிளப் 2-வது இடத்தையும், மூலனூர் ஆசிரியர்கள் அணி 3-வது இடத்தையும் பிடித்தன. அரசு ஊழியர் பெண்கள் பிரிவில் கேத்தனூர் அரசு ஆசிரியைகள் அணி முதலிடத்தையும், திருப்பூர் அரசு மருத்துவத்துறை அணி 2-வது இடத்தையும், ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 3-வது இடத்தையும் பிடித்தன.

2 ஆயிரம் வீரர், வீராங்கனைகளுக்கு 2 நாட்களாக ரூ.2 லட்சம் செலவில் மாவட்ட கபடி கழகத்தின் சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டன. முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு பயிற்சி அளித்து மாநில போட்டிக்கு திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் பங்கேற்க உள்ளனர். முன்னதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வரவேற்றார். மாவட்ட பள்ளி விளையாட்டு ஆய்வாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.



Related Tags :
Next Story