மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்று தானும் உயிரை மாய்த்த பெண்-காரைக்குடியில் பரபரப்பு

செல்போனை கீழே போட்டதை கணவர் கண்டித்ததால் மகளை தூக்கில் தொங்கிவிட்டு கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்குடி
செல்போனை கீழே போட்டதை கணவர் கண்டித்ததால் மகளை தூக்கில் தொங்கிவிட்டு கொன்று பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகளுடன் தற்கொலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி(வயது 42). மகள் பிரியதர்ஷினி(8). இவள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்தநிலையில், ேநற்று மாலை ராஜகோபாலின் செல்போனை வாங்கி பிரியதர்ஷினியும், செல்வியும் உறவுக்காரர்களிடம் பேசினர். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் கையில் இருந்து நழுவி கீழே விழுந்தது.
ெசல்போன் தரையில் விழுந்ததில் அது சேதமாகிவிட்டதாக தெரிகிறது. இதை பார்த்த ராஜகோபால், "செல்போனை ைவத்து ஒழுங்காக பேச தெரியாதா, எனது போனை இப்படி உடைத்து விட்டீர்களே?" என சத்தம் போட்டுள்ளார்.
மேலும் அவர் மனைவி செல்வி, மகள் பிரியதர்ஷினியை திட்டியதாக தெரிகிறது. இதில் மனவருத்தம் அடைந்த செல்வி, மகளை தூக்கில் தொங்கவிட்டு கொன்றுள்ளார். பின்னர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சோகம்
இதுகுறித்து தகவல் கிடைத்ததும், காரைக்குடி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் காரைக்குடியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.