கிராமசபை கூட்டத்திற்குள் கல்வீச முயன்ற பெண்


கிராமசபை கூட்டத்திற்குள் கல்வீச முயன்ற பெண்
x
திருப்பூர்


பல்லடம் ஒன்றியம் கரைப்புதூர் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டம் அவரப்பாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் ரவி மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை சாக்கடை, தெருவிளக்கு ரோடு வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கூட்டத்திற்கு வந்த பெண் ஒருவர் கைதட்டி, கும்பிடு போட்டும் சாமி ஆடியபடியும் இருந்தார். இவரது செயல்பாடுகளைக் கண்ட கிராம சபையில் கூடியிருந்த பொதுமக்கள் அவரை வெளியே அப்புறப்படுத்தினர். சிறிது நேரத்தில் மீண்டும் கிராம சபைக்குள் வந்த அப்பெண், கைகளில் கல்லை எடுத்து வந்தார். கூடியிருந்த பொது மக்களை பார்த்து கல்லை எறிய முயற்சித்த போது, அங்கிருந்தவர்கள் பெண்யை எச்சரித்து வெளியே அனுப்பினர். இதனால் கிராம சபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story