குளச்சல் மீனவர்கள் வலையில் சிக்கிய கொம்பன் திருக்கை மீன்கள் 300 கிலோ ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை


குளச்சல் மீனவர்கள் வலையில் சிக்கிய கொம்பன் திருக்கை மீன்கள் 300 கிலோ ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை
x
தினத்தந்தி 22 Feb 2023 6:45 PM GMT (Updated: 22 Feb 2023 6:45 PM GMT)

குளச்சல் மீனவர்கள் வலையில் ஏராளமான கொம்பன் திருக்கை மீன்கள் சிக்கின. 300 கிலோ ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் மீனவர்கள் வலையில் ஏராளமான கொம்பன் திருக்கை மீன்கள் சிக்கின. 300 கிலோ ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

திருக்கை மீன்கள்

குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளங்களும் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகிறது.

விசைப்படகுகளில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம். ஆழ்கடல் பகுதியில் தான் சுறா, கேரை, இறால், புல்லன், கணவாய், கிளி மீன்கள், ராட்சத திரட்சி எனப்படும் திருக்கை போன்ற உயர் ரக மீன்கள் கிடைக்கும்.

அதே சமயத்தில் பைபர் வள்ளங்கள் காலையில் சென்று விட்டு மதியம் கரை திரும்பி விடும். அதன்படி நேற்று பைபர் வள்ளங்களில் பிடித்து வரப்பட்ட சூரை மீன்கள் வழக்கத்தை விடவும் அதிக விலைக்கு போனது.

போட்டி போட்டு ஏலம்

விசைப்படகில் பிடித்து வரப்பட்ட புல்லன் மீன்கள் விலை குறைந்து ரூ.100-க்கும், சூரை மீன்கள் கிலோ ரூ.100-க்கும் விலை போனது. நேற்று காலையில் வந்த விசைப்படகில் ஏராளமான கொம்பன் திருக்கை மீன்கள் சிக்கியிருந்தன.

திருக்கை மீன்களுக்கு மருத்துவக்குணம் உள்ளதால் மருந்து நிறுவன வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டு வாங்கி சென்றனர். அந்த வகையில் சுமார் 300 கிலோ எடை கொண்ட திருக்கை மீன்கள் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனையானது.


Next Story