கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயது வரை, 15 முதல் 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட 98.92 சதவீதம் பேர் முதல் தவணையும், 79.06 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 15 முதல் 18 வயது பிரிவில், 88.64 சதவீதம் பேர் முதல் தவணையும், 75.18 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 12 முதல் 14 வயது பிரிவில் 90.44 சதவீதம் பேர் முதல் தவணையும், 66.84 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரம் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி நேற்று நடந்த முகாமில் செலுத்தப்பட்டது. அரசு மருத்துவக்கல்லூரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகம், பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தின் 1,341 இடங்களில் முகாம் நடந்தது. பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.


Next Story