கவுந்தப்பாடி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- இன்று நடக்கிறது


கவுந்தப்பாடி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- இன்று நடக்கிறது
x

கவுந்தப்பாடி அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்- இன்று நடக்கிறது

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி அருகே கவுந்தப்பாடி புதூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 28-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. 29-ந் தேதி அன்று வாஸ்து சாந்தியும், நேற்று முன்தினம் பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதலும், மாலையில் முதல் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று காலை 2-ம் கால யாக பூஜையும், பின்னர் அரிசி கூடை எடுத்து வருதலும், மாலையில் 3-ம் கால யாக பூஜையும், இரவு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தது.

இன்று (வெள்ளிக்கிழமை) 4-ம் கால யாக பூஜை நடக்கிறது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. காலை 9.30 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் விநாயகர், மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தா பி.சி.செந்தில்குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.


Next Story