மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா


மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
x

மாணிக்கம்பாளையம் மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா

ஈரோடு

அம்மாபேட்டை

அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம்பாளையத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு பூச்சாட்டுதல், கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் இரவு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை பூவோடு எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்று பகலில் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து மாவிளக்கு பூஜையும், கிடா வெட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் இரவில் மாணிக்கம்பாளையம் புதூரில் இருந்து அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தினர்.

இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவுபெறுகிறது.


Next Story