திண்டுக்கல் வீரர்களுக்கு பாராட்டு

தேசிய ஸ்கேட்டிங் ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் சாதனை படைத்த திண்டுக்கல் வீரர்களை சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஆத்ம மாலிக் சர்வதேச பள்ளியில், 8-ம் ஆண்டு தேசிய அளவிலான ஸ்கேட்டிங் ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி கடந்த 25-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். போட்டிகள் 10, 14 வயதிற்குட்பட்ட மற்றும் சீனியர் என 3 பிரிவுகளாக நடந்தது. இதில் சிறப்பாக விளையாடிய தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி, 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
தமிழக அணியில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த 23 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்று விளையாடினர். இதையொட்டி திண்டுக்கல் திரும்பிய வீரர்களுக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், தங்கப்பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் தமிழக அணியின் தலைமை பயிற்சியாளருமான மாஸ்டர் தங்கமுருகன், பயிற்சியாளர் வினோத் ஆகியோரை திண்டுக்கல் மாவட்ட ஏரோ ஸ்கேட்டோபால் சங்க தலைவர் சரவணபெருமாள் வரவேற்று வாழ்த்தி இனிப்பு வழங்கினார். இதில் மாஸ் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் வீரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.