காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x

காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரூர்

கரூர் வெங்கமேட்டில் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விநாயகர், பாலமுருகன், கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 4-ந் தேதி காலை விநாயகர் பூஜை, சங்கல்பம் மகா கணபதியாகம், மகா லட்சுமி யாகம், பூர்ணாஹுதி ஆகியவை நடைபெற்றது.

பின்னர் தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து கொடுமுடி காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல், மாலை ஈஸ்வரன் கோவில் முன்பு இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தத்தை ஊர்வலமாக சர்ச்கார்னர் மற்றும் வெங்கமேடு மேம்பாலம் வழியாக சென்று கோவிலை வந்தடைதல் ஆகியவை நடைபெற்றன. இதில் யானை ஊர்வலத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் அன்று மாலை விநாயகர் பூஜை, வாஸ்த்து சாந்தி, அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்பாலங்காரம் உள்ளிட்டவை நடந்தது. நேற்று முன்தினம் காலை விஷேச சாந்தி, விநாயகர் பூஜை, மண்டபார்ச்சனை, பஞ்சாஸன, பஞ்சாவரன பூஜை ஆகியவை நடைபெற்றது.

பின்னர் கோபுரம் கண் திறத்தல் நிகழ்வும், பரிவாரம் பிரதிஷ்டை, 2-ம் கால த்ரவயாஹுதி, பூர்ணாஹுதியும், பின்னர் அன்று மாலை விநாயகர் பூஜை, புண்யாகம், மண்டபார்ச்சனை, லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனையும், பின்னர் மூலஸ்தானம் அம்பாள் பிரதிஷ்டை, 3-ம் கால த்ரவ்யாஹுதி, பூர்ணாஹுதி தீபாராதனை நிகழ்வும் நடைபெற்றது. இதனையடுத்து நேற்று காலை விநாயகர் பூஜை, பிம்பி சுத்தி ரக்ஷாபந்தனம், நாடி சந்தானம், ஸ்பர்சாஹுதி, 4-ம் கால பூஜைகளும் நடைபெற்றது. பின்னர் கலசம் புறப்பாடு நிகழ்வும் கலசங்களுக்கு நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கெண்டு சாமி தாரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரவு நகைச்சுவை பாட்டு பட்டிமன்றம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை வெங்கமேடு செங்குந்தர் முதலியார் சமூகத்தினர் செய்திருந்தனர்.


Next Story