கூத்தம்பாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரம் மரக்கன்றுகளுடன் குருங்காடு அமைப்பு
கூத்தப்பாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரம் மரக்கன்றுகளுடன் குருங்காடு அமைக்கப்பட்டு வருகிறது.
காவேரிப்பாக்கம்
கூத்தப்பாக்கம் ஊராட்சியில் 2 ஆயிரம் மரக்கன்றுகளுடன் குருங்காடு அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று குருங்காடு திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தின் பல பகுதிகளில் தி.மு.க.வினர் மரக்கன்றுகளை நட்டு குருங்காடு அமைத்து அதனை பராமரித்து வருகின்றனர். தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளார் வினோத்காந்தி அறிவுறுத்தலின்படி ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அருகே உள்ள கூத்தம்பாக்கம் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 2 ஏக்கா் பரப்பளவில் சுமாா் 2,000-க்கும் மேற்பட்ட நாவல் செடி, நீா்மருது, இலுப்பை, வேப்பம், புங்கை, பூவரசன் போன்ற மரகன்றுகளை நடவு செய்து சுற்றி வேலி அமைத்து ஒன்றிய சுற்றுசூழல் அணியினர் சார்பில் பராமரித்து வருகின்றனர்.
கூத்தம்பாக்கம் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் குருங்காடு பகுதியில் நடவு செய்து பராமரித்து வரும் மரக்கன்றுகளை சுற்றுசூழல் அணி மாநில துணை செயலாளா் வினோத்காந்தி பாா்வையிட்டு பராரிப்பு குறித்தும், மரக்கன்றுகளின் பாதுகாப்பு குறித்தும் சுற்றுசூழல் அணியினரிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சிட்டிபாபு, காவேரிப்பாக்கம் ஒன்றிய துணை செயலாளா்கள் துரைமஸ்தான், தெய்வசிகாமணி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி துணை அமைப்பாளர் கோபி, கூத்தம்பாக்கம் கிளை பொறுப்பாளா்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.