போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா


போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா
x
தினத்தந்தி 16 Jun 2023 12:30 AM IST (Updated: 16 Jun 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் நிலையம் முன்பு பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகப்பட்டினம்

நாகை மருத்துவ தெருவை சேர்ந்த கணேசன் மனைவி அமுதா (வயது50). இவருடைய வீட்டில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறை கட்டிவந்தார். இந்த கழிவறையை மர்ம நபர்கள் சிலர் இடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் அளிப்பதற்காக நேற்று அமுதா வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். ஆனால் போலீசார் அவருடைய புகாரை ஏற்க மறுத்ததாக கூறி அமுதா, திடீரென போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.


Next Story