31 ஆண்டுகளுக்கு பிறகு பாலவாடி ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி-எம்.எல்.ஏ.க்கள் மலர்தூவி வரவேற்பு
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலவாடி ஏரி 110 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு கடந்த சில நாட்களாக பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து உபரி நீர் பல்வேறு ஏரிகளின் வழியாக வர தொடங்கியது. இந்தநிலையில் நேற்று 31 ஆண்டுகளுக்கு பிறகு பாலவாடி ஏரி நிரம்பியது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஷ்வரன் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து ஏரியில் மலர்தூவி தண்ணீரை வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, முருகசாமி, பெரியசாமி, சக்தி, மணி, முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வேடி, கதிர்வேல், குமரவேல் மற்றும் விவசாயிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story